lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

aga naga - a.r. rahman lyrics

Loading...

[பாடல் வரிகள் * “அக நக” * ஏ. ஆர். ரகுமான், இளங்கோ கிருஷ்ணன், சக்திஸ்ரீ கோபாலன்]

அகநக அகநக முகநகையே, ஓ…
முகநக முகநக முறுநகையே, ஓ…
முறுநக முறுநக தருநகையே, ஓ…
தருநக தருநக வருநனையே…

யாரது, யாரது, புன்னகை, கோர்ப்பது
யாவிலும், யாவிலும், என் மனம், சேர்ப்பது

நடைபழகிடும் தொலை அருவிகளே, ஓ…
முகில் குடித்திடும் மலை முகழடுகளே, ஓ…
குடை பிடித்திடும் நெடு மரச் செறிவே…
பனி உதிர்த்திடும் சிறு மலர் துளியே…

அழகிய புலமே, உனதிள மகள் நான்
வளவனின் நிலமே, எனதரசியும் நீ
வளநில சிரிப்பே, எனதுயிரடியோ
உனதிலம் வனப்பே, எனக்கினிதடியோ
உனை நினைக்கையிலே, மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால், உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தாள், தவிதவிக்கிறதே
நினைவழிந்திடுதே…

அகநக அகநக முகநகையே, ஓ…
முகநக முகநக முறுநகையே, ஓ…
முறுநக முறுநக தருநகையே, ஓ…
தருநக தருநக வருநனையே…
யாரது, யாரது, புன்னகை, கோர்ப்பது
யாவிலும், யாவிலும், என் மனம், சேர்ப்பது

யாரது, யாரது, புன்னகை, கோர்ப்பது
யாவிலும், யாவிலும், என் மனம், சேர்ப்பது

Random Song Lyrics :

Popular

Loading...