pookkalae sattru oyivedungal - a.r. rahman lyrics
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
தின தக்கிடுதானே நா …
இந்த உலகில் உனைவெல்ல ஒருவன் இல்லை உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ
விழி அழகு கடந்து உன் இதயம் நுழைந்து என் ஐம்புலன் உணர்ந்திடும் ஐ
இவன் பயத்தை அணைக்க அவள் இவனை அணைக்க அவள் செய்கையில் பெய்வது ஐ
அவள் விழியின் கனிவில் இந்த உலகம் பணியும் சிறு நொய்யளவு
ஐயமில்லை
என் கைகளை கோர்த்திடு ஐவிரலை
இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை
அவள் இதழ்களை நுகர்ந்துவிட பாதை நெடுக தவம் புரியும்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால் அந்த கடவுளின் துகள் அவள்தானா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
நீர்வீழ்ச்சி போலே நின்றவன் நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன் நான் ஆட ஒரு மேடை ஆனான்
என்னுள்ளே என்னை கண்டவள் யாரென்று எனை காணச்செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்தவள் சிற்பம் செய்து கையில் தந்தாள்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகலிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
மறு உயிர் தந்தாள் நிமிர்ந்திடச் செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் வீச வந்தாளே
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
ஹே ஐ என்றால் அது அழகு என்றால் அந்த ஐகளின் ஐ அவள்தானா
ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால் அந்த ஐகளின் ஐ அவன் நீயா
ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்
ஐகளுக்கெல்லாம் விடுமுறையை அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
பூக்களே சற்று ஓய்வெடுங்கள் அவள் வந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்
Random Song Lyrics :
- voyeur - morticia lyrics
- flood - zxmra lyrics
- penis - izaaq lyrics
- the story i'll tell (live) - naomi raine lyrics
- kill a man - jelly roll lyrics
- luvr/hidden hills - yoki 1800 lyrics
- diet rock (1982 version) - charlie "principal" chaplin lyrics
- буерак - маразм аркадия lyrics
- hypnotised - svmu lyrics
- miracles - praisemani lyrics