
follow me - emceejay lyrics
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்”
நந்தவனத்தில் ஓர் ஆண்டி
பத்துமாதமாய்க் குயவனை வேண்டி
அன்று கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடி போத்துடைத்தாண்டி
பிறவி தாண்டி
மீண்டும் பிறந்து அழிந்து பிறந்து
வஞ்சகம் செய்து தன்னைக் கொண்டாடி
உடல் அழிந்து இறுதியில் மண்ணோடு சமாதி
மனங்களும் மடக்கும் மேனி
மெய்ப்பொருள் கண்டு விளங்குமே ஞானி
தென்பிறை களைய நினைவோடிருப்போர்
முன்பிறை காண உயர்பவர் அன்றோ
மன்னுயிர் கொன்று
சுட்டதைத் தின்று
தோற்றத்தை விட்டு
வென்றதைக் கொண்டு
ஆறாத காயம் ருசிப்பது மாட்டார்
தலைகூத்த மார்பை ரசிப்பதற்கு ஒப்பு
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோகும்
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்
தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்”
ஊழ் வினை உன் வினை
தன்னைச்சுடும் வினை முன் வினை
அதன் முன் வணங்கிடு தலைவனை
சேர்வாய் காலனை உதைத்த நாயன் நடுவனை
பூரணமே ஈசனே
காரணமே காலனே
வாரணமே நமச்சிவாய
மரணமே வருக வருக
அவன் இருக்க பயம் ஒழிக ஒழிக
சந்தன குங்கும சான்றும் பரிமளமும்
வித்தைகள் அனைத்தும்கூத்த காமுகனும்
காந்தக்கண் கொண்டிருக்கும் மாதவரும் கன்னியரும்
வெந்த சதை பெந்த சதை நாளை பார் வெந்த சதை
நீர்க்குமிழி வெடித்துவிடும்
உயிர்கூத்தை பிளந்துவிடும்
கூச்சகூட இயலாது
கோணித்துணி மறைத்துவிடும்
மேலென்ன கீழேன்ன
நீயென்ன நானென்ன
உயிர்போகும் தருவாயில் ஈசனே சரணாகதி
கண்ணில் காண்பதும் ரசிப்பதும் அழிந்துபோகும்
இந்த உடலெனும் காயமும் அழிந்துபோகும்
ஊன்பொருள் தீக்கிரை அழிந்துபோகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோ
உடலினை நிஜமென எண்ணி எண்ணி
தினம் உயிரை மாய்த்தவர் கோடி கோடி
கோடிப்பணமும் அழிந்து போகும்
இந்த உலகமும் பிரபஞ்சமும் அழிந்துபோனாலும்
அழியாதது உன் பாதம்
பணித்த சடையும் பவளம் போல் மேனியும்
அழியாதது உன் நாமம்
நமச்சிவாயம் நமச்சிவாயம்
கரையாதது மானுட பாவம்
ஒன்பது குடில்களும் ஆறடி உடம்பும்தவறாது என் பற்று அறுத்து
ஏற்றுக்கொள் நடுவா நமச்சிவாயம்”
நமச்சிவாயம்
Random Song Lyrics :
- maria loca - os virgulóides lyrics
- sem essa de adeus - amizade verdadeira lyrics
- acordo - stênio március lyrics
- org. & progresso - cabal lyrics
- você não vai me ver chorar - alan e nando lyrics
- pensa que me engana - otávio augusto e gabriel lyrics
- volverás - nicole natalino lyrics
- testimony of apocalypse - sacrament lyrics
- kokou no sousei - yousei teikoku lyrics
- tradução - simon & garfunkel lyrics