
penne penne - g. v. prakash kumar lyrics
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ பாராததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை
ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
நான் உன்னை காணும் வரை என் வாழ்வில் ஏதோ குறை
உன்னை கண்ட அந்நாள் முதல் அன்றாடம் மூன்றாம் பிறை
கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க நான் கேட்டேனே அன்பின் சிறை
பார்க்கும்போதே பாவை சிலை காணாமல் போன கதை
என்னை வாவென்றாய் நீ கேட்டு ஓடோடி பக்கத்தில் வந்தேன்
கண்கள் பொய் சொன்னதால் கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன்
சாலை ஓரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் நீ வந்தால் நான் தானே புல்லாங்குழல்
ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
காற்றை தூதாக நான் விட
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ
உன் கண்ணின் மை பூசி நீவீட
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ
முன்னும் முன்னூறு ஆண்டுகள்
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம்
ஏங்கி நான் பெற்ற என் வாரம்
ஐயோ இப்போது யாரிடம்
உன்னை பாராது முத்தம் தாரது
இனி தூங்காதே என் கண்களே
பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன்
நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ பாராததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை
Random Song Lyrics :
- slide - peacemakers lyrics
- wake up call - winne lyrics
- medium - nostrum grocers lyrics
- high class taboo (booze & broads mix) - my life with the thrill kill kult lyrics
- vapor - taelor gray lyrics
- смарт (smart) - pharaoh lyrics
- ex - sedafoxx lyrics
- the devil is in her eyes - the jayhawks lyrics
- poor boy - corey gipson lyrics
- life pt.2 - waruhi lyrics