lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

kaathirundhen - ghibran feat. ananthu & srisha vijayasekar lyrics

Loading...

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை
பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம்வரை

நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியதென்றும் நான்கூட அதே நிலை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் பொய் வரும் தூரம்வரை

முகவரிகள் இல்லா ஒரு முதல் கடிதமாய்
பல கதவு மோதும் காகிதம் நானேனே
அறிமுகங்கள் இல்லா பல கதவுகளிலும்
குறு முகத்தை தேடும் கார்முகிழ் நானேனே

பேசாத கதை நூறு
பேசும் நிலை வரும் போது
வார்த்தையென எதுவும் வராது
வராது வராது மௌனம் ஆனேனே

காலம் உறைந்தே போகும்
காற்று அழுதே தீரும்
இந்த நொடி இறந்தாலும் சம்மதம்
கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்

காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலடி ஓசைகள் கேட்கும்வரை

நீங்காமல் உன்னை நான் எண்ணி வாழ்ந்தேன்
நினைவில் பாதி கனவில் பாதி நாள்தோறும் இதே நிலை
வெளியில் சொல்ல முடியதென்றும் நான்கூட அதே நிலை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்
பார்வைகள் போய் வரும் தூரம்வரை

Random Song Lyrics :

Popular

Loading...