lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

konjam veyilaga - hariharan & jeyanth lyrics

Loading...

கொஞ்சம் வெயிலாக கொஞ்சம் மழையாக
கொஞ்சம் குளிராக வருவாய் அன்பே
கொஞ்சம் நிழலாக கொஞ்சம் குடையாக
கொஞ்சம் கனவாக வருவேன் உன் அருகே
எனதாயுள் பூராவும் ஒரு நொடியில் பறிபோகும்
இந்த மாயம் என்ன என்று
இனி யாரிடத்தில் கேட்க
சொல் என் கனவே

கொஞ்சம் .

நீ வரும் பாதை எங்கும் பூக்களில் பாய் விரிப்பேன்
ஒவ்வொரு பூவுக்குள்ளும் இதமாக நான் இருப்பேன்
தீயிலும் உன் பெயர் எழுதியே நான் படிப்பேன்
கடவுளின் கவிதைகளை கடனாக நான் கேட்பேன்
உன் விழி பார்வைக்கு காத்திருந்தேன்
ஒவ்வொரு நொடி பொழுதும் தவம் கிடப்பேன்
இது காற்றில்லாத புது பூமி
நீ தென்றலாக வர வேண்டும்
இது ஊற்று இல்லாத ஒரு பாறை
நீ தண்ணீராக வர வேண்டும்
சொல்லாத சொல்லெல்லாம் மின்சாரமாய்
என் மீது பாய்கிறதே வா அன்பே

கொஞ்சம் .

நீ தரும் காற்றை வைத்து அழகான சிலை வடித்தேன்
நீ விடும் மூச்சை கூட நெஞ்சுக்குள் சிறை வைத்தேன்
நீ தரும் வானம் எங்கும் காற்றாக நான் பறப்பேன்
நீ இடும் கோலம் எல்லாம் இதமாக நான் பிறப்பேன்
நூல் மேல் நடக்க பழக்கி விட்டாய்
இருட்டுக்குள் தனிமையில் சிரிக்க விட்டாய்
இது கடல் இல்லாத oru கப்பல்
நீ வழிகளாக வர வேண்டும்
இது மொழி இல்லாத புது வார்த்தை
கவிதையாக தர வேண்டும்
வெயிலோடு மழை வந்து விளையாடுதே
கனவுக்கு விழி தந்து போகும் பெண்ணே

கொஞ்சம் …

Random Song Lyrics :

Popular

Loading...