
from "gunaa" - ilaiyaraaja lyrics
அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்
கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு
ஞானப் பெண்ணே
குப்பையாக வந்த உடம்பு
அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்
ஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு
ஞானப் பெண்ணே போகும் கரும்பு
பந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்
எந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்
அப்பன் என்றும் அம்மை என்றும் …
குத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா
சுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா
சிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா
புத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா
ஆதி முதல் அந்தம உன் சொந்தம்
உன் பந்தம் நீ உள்ளவரை தான்
வந்து வந்து கூடும் கூட்டம் தான்
விட்டோடும் ஓர் சந்தை கடை தான்
இதில் நீ என்ன நான் என்ன
வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு
கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்
ஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்
ஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா
ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா
தட்டு கேட்டு ஓடும தள்ளாடும்
எந்நாளும் உன் உள்ளக் குரங்கு
நீ போடு மெய்ஞான விலங்கு
மானம் ஆடாமல் வாடாமல்
மெய்ஞானம் உண்டாக
அஞ்ஞானம் அற்று விழும்
அப்பன் என்றும் …
Random Song Lyrics :
- the sub marina - jgrxxn lyrics
- xoxo - te-tris lyrics
- polloucarpus - louca lyrics
- demon breath - summoned souls lyrics
- 22 - coleo lyrics
- speedin' - prettyguynamedkey. lyrics
- sweatpants and chardonnay - julian m. stern lyrics
- ta riel - lmoutchou (mobydick) lyrics
- herz und seele - afrob (de) lyrics
- perfect - grojband(corey jaron riffin, laney penn, kin kujira and kon kujira) lyrics