
malai murasu - kevin miranda lyrics
மாலை முரசு கால வரும்
தந்தி பேப்பர் மால வரும்..
இதுதான் எங்க ஊரு
இதுதான் எங்க வாழ்க்க ..
மலைய சுத்தி பாத்து மனச நீயும் தேத்து
ஊரச் சுத்திக் காடு காட்டுக்குள்ள ரோடு
ரோடு சேரும் ஊரு அழகுமலப் பேரு..
காத்தடிச்சா மழையடிக்கும்
காட்டு மரம் கொடபுடிக்கும்
ஒத்த வழிச் சாலையில
இரண்டு தரம் பஸ்சு வரும்
இதுதான் எங்க ஊரு
அழகு மலப் பேரு…
மாலை முரசு கால வரும்
தந்தி பேப்பர் மால வரும்..
இதுதான் எங்க ஊரு
இதுதான் எங்க வாழ்க்க
எல்லையெல்லாம் கல்லு
கல்லு மேல புல்லு
புல்ல மேயும் பசு மாடு
மாடனான ஊரு ..
பள்ளிக்க்கூடம் போறோம் கட்டடிச்சதில்ல
கட்டடிச்சு போக தேட்டரேதுமில்ல
டெஸ்ட்டு டியூப் பேபி / நாங்க யூ டியூப் பாத்து செய்வோம்
உள்ளங்கையில் உருளும்
உலகம் உணரும் தருணம்
மாலை முரசு கால வரும்
தந்தி பேப்பர் மால வரும்..
இதுதான் எங்க ஊரு
இதுதான் எங்க வாழ்க்க
மலைய சுத்தி பாத்து
மனச நீயும் தேத்து…
இதுதான் எங்க ஊரு
அழகு மலப் பேரு…
Random Song Lyrics :
- rosas en el mar (auterretratos) - luis eduardo aute lyrics
- i’m not real - tv girl & george clanton lyrics
- meeting - mercedes lackey lyrics
- 泣き虫少年 (2010 mix version) (nakimushi shounen (1010 mix version) - buono! lyrics
- altesse - le phénix lyrics
- idkwywfm - dreskii ! lyrics
- delusional - zzztud lyrics
- casando la luna - omar rodríguez-lópez lyrics
- дождик(rain) - nenheart lyrics
- timide man - bertrand lyrics