lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

murali manohara - mano lyrics

Loading...

முரளி மனோகர மோகன அமுராரி
அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
முரளி மனோகர மோகன அமுராரி

அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
இவன் வெண்ணைத் திருடி மண்ணையும் தின்ற கண்ணன்
திருவாயைத் திறந்து உலகை காட்டிய மன்னன்
இவன் வெண்ணை திருடி மண்ணையும் தின்ற கண்ணன்
திருவாயைத் திறந்து உலகை காட்டிய மன்னன்
குழலை ஊதி மழலை பேசும் மாயக் கண்ணன்
புன்சிரிப்பால் நம் மனதை கொள்ளை கொள்ளும் கள்வன்
முரளி மனோகர மோகன அமுராரி
அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
இவன் கோபியர் அனைவரும் கொண்டாடும் கண்ணன்
பல லீலா வினோதம்
புரிந்திடும் நீலவண்ணன்
இவன் கோபியர் அனைவரும்
கொண்டாடும் கண்ணன்
பல லீலா வினோதம்
புரிந்திடும் நீலவண்ணன்
விரும்பிடும் வண்ணம் குறும்புகள் செய்யும் மாயக்கண்ணன்
தன் லீலைகளாலே மனதை கொள்ளை கொள்வான்
முரளி மனோகர மோகன அமுராரி
அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி
தன் விழியால் நல்வழி காட்டுவான் இவன்…
தன் விழியால் நல்வழி காட்டி ஒளியால் நல்லருள்கூட்டி
அன்பால் துயர் போக்க அவதரித்த கிருஷ்ணன்.
கண்ணா கரு வண்ணா
மன்னா மணிவண்ணா
பல அற்புதங்கள் புரிய
அவதரித்தாய் நீயே
உழைப்பதால் சக்தி பெருகுகிறது மாதவா.
இல்லை பார்த்தா
உதவி செய்வதால் சக்தி பெருகுகிறது
நல்லோருக்கு செய்யும் சகாயத்தால் சக்தி பொங்குகிறது
புறப்படலாம்
முரளி மனோகர மோகன அமுராரி
அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி.
அன்பை வாரி வழங்கிடும் மாதவன் அவனே ஞானி.

Random Song Lyrics :

Popular

Loading...