
ponnondru kandaen (original) - p. b. sreenivas & t. m. soundararajan lyrics
பொன் ஒன்று கண்டேன்
பொன் ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும்… கொடியிடையாள்
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன்… அங்கே… கண்டேன்… வந்தேன்
பெண் ஒன்று கண்டேன்
பொன் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
நான் பார்த்த பெண்ணை
நீ பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
நீ பார்த்த பெண்ணை
நான் பார்க்கவில்லை
உன் பார்வை போலே
என் பார்வை இல்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
நான் கண்ட காட்சி
நீ காணவில்லை
என் விழியில் நீ இருந்தாய்
என் விழியில் நீ இருந்தாய்
உன் விழியில் நான் இருந்தேன்
உன் வடிவில் நான் இருந்தேன்
நீயின்றி நான் இல்லை
நானின்றி நீ இல்லையே
சென்றேன்… கண்டேன்… வந்தேன்
பூ ஒன்று கண்டேன்
பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
பூ ஒன்று கண்டேன்
முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்ல வேண்டுமா
கண்ணதாசன்
Random Song Lyrics :
- my - валькирин (valkirin) lyrics
- spirit 60th anniversary - secret birthday lyrics
- dead by the night - van canto lyrics
- пожар в люксе (fire in luxe) - goodandrei lyrics
- bad day - kristian casey lyrics
- pekala - jako lyrics
- trả hết nợ - la hoàng phúc lyrics
- bendita - fntxy lyrics
- breeze - 21lilkay lyrics
- yuh's basement - charlie bett lyrics