lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

naan nee - santhosh narayanan lyrics

Loading...

[பாடல் வரிகள் * “நான் நீ” * சந்தோஷ் நாராயணன், ஷக்திஸ்ரீ கோபாலன், தீ]

நான், நீ, நாம் வாழவே உறவே…
நீ, நான், நாம் தோன்றினோம் உயிரே…

தாபப்பூவும் நான் தானே…
பூவின் தாகம் நீ தானே…

நான் பறவையின் வானம்…
பழகிட வா, வா, நீயும்…
நான் அனலிடும் மேகம்…
அணைத்திட வா, வா, நீயும்…

தாபப்பூவும் நான் தானே…
பூவின் தாகம் நீ தானே…

உயிர் வாழ, முள் கூட
ஓர் பறவையின் வீடாய் மாறிடுமே, உயிரே
உன் பாதை மலராகும்…
நதிவாழும், மீன் கூட
ஓர் நாளில் கடலை சேர்ந்திடுமே, மீனே
கடலாக அழைக்கின்றேன்…

தாபப்பூவும் நான் தானே…
பூவின் தாகம் நீ தானே…
அனல்காயும் பறையோசை
ஓர் வாழ்வின் கீதம் ஆகிடுமே, அன்பே
மலராத நெஞ்சம் எங்கே?
பழி தீர்க்கும் உன் கண்ணில்
ஓர் காதல் அழகாய் தோன்றிடுமே, அன்பே
நீ வாராயோ?

தாபப்பூவும் நான் தானே…
பூவின் தாகம் நீ தானே…

நான், நீ, நாம் வாழவே உறவே…
நீ, நான், நாம் தோன்றினோம் உயிரே…

தாபப்பூவும் நான் தானே…
பூவின் தாகம் நீ தானே…

நான் பறவையின் வானம்…
பழகிட வா, வா, நீயும்…
நான் அனலிடும் மேகம்…
அணைத்திட வா, வா, நீயும்…

தாபப்பூவும் நான் தானே… (நான், நீ, நாம்)
பூவின் தாகம் நீ தானே… (நான், நீ, நாம்)

Random Song Lyrics :

Popular

Loading...