neruda - shakthisree gopalan & nicky.m (india) lyrics
[பாடல் வரிகள் * “நெருடா” * நிக்கி.எம், சக்திஸ்ரீ கோபாலன்]
[கோரஸ்]
நெருடா, என் நெருடா
எனை நீங்காமல் நீங்காதே
எனக்குள் நீ பூக்கும் நொடி…
சிலையாய், ஓர் சிலையாய்
நான் உயிரோடு மெழுகானேன்
விழியில் நீ சுமப்பாய் இனி…
ரூமியின் காதல் கவி நீ
ஷெல்லியின் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி, நீ வா
என் நெருடனே…
ரூமியின் காதல் கவி நீ
ஷெல்லியின் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி, நீ வா
என் நெருடனே…
[வசனம் 1]
உதிரா, நீ எந்தன் உயிர் மீதிலே
அணு துகள் போலே கரைகிறாய், பெருங்காதலே
அலரே, புதுப்பூவின் பனி போலவே
என் மாற்றங்கள் உனர்கிறேன் நான், நிஜம் மீதிலே
நெருடா, உன் விரதம் கலைக்க வரவா
வரவா, உன் வயதை உடைக்கும் தனிமை நான்
அடடா, என் அழகை அருந்தும் அசுரா
ஓர் இரவாய், என்னுள் இசைந்தாயடா
இதழ்கள் பட, விரைந்தாயடா…
[பாலம்]
நெருடா, நெரு நெருடா, நெரு நெருடா
என்னை நெருங்கி வாடா
நெருடா, நெரு நெருடா, நெரு நெருடா
என்னை நெருங்கி வாடா
நெருடா, நெரு நெருடா, நெரு நெருடா
என்னை நெருங்கி வாடா
நெருடா, நெருடா
கனவாய், வா வா…
[கோரஸ்]
நெருடா, என் நெருடா
எனை நீங்காமல் நீங்காதே
எனக்குள் நீ பூக்கும் நொடி…
சிலையாய், ஓர் சிலையாய்
நான் உயிரோடு மெழுகானேன்
விழியில் நீ சுமப்பாய் இனி…
ரூமியின் காதல் கவி நீ
ஷெல்லியின் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி, நீ வா
என் நெருடனே…
ரூமியின் காதல் கவி நீ
ஷெல்லியின் ஸ்நேஹ வரி நீ
எனக்குள் மோக மொழி, நீ வா
என் நெருடனே…
[முடிவு]
என் நெருடனே…
Random Song Lyrics :
- девочка-весна (spring-girl) - shaman lyrics
- вассап (wassup) (unrelease demo) - trapkidtrapplu lyrics
- fuck love - wayleen lyrics
- ass ripper - my toilet is clogged lyrics
- σαμποτάζ (sabotage) - hat trick (gr) lyrics
- baby cómo estás - alberto stylee lyrics
- neem 'm als een man - zoë tauran lyrics
- how long - rijune lyrics
- buried in the cold - sgl lyrics
- hello & goodbye - cazzell lyrics