lirikcinta.com
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

nee yenadharuginil nee - vishal chandrashekhar lyrics

Loading...

[பாடல் வரிகள் * “நீ எனதருகினில் நீ” * விஷால் சந்திரசேகர், சக்திஸ்ரீ கோபாலன்]

நீ, எனதருகினில் நீ
இதை விட ஒரு கவிதை கிடையாதே…
நீ, எனதுயிரினில் நீ
இதை விட ஒரு புனிதம் இருக்காதே…
காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே
கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே
இது வரை தீண்டாத ஓர் இன்பம் கை நீட்டுதே

கனவா? நிஜமா? இது இரண்டும் தானா?
விடை அருகின்ற தேடல்கள் தேவை தானா?
வெயிலா? மழையா? இது வானவில்லா?
இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா?

காதல், பாடிடும் பாடல்
நெஞ்சோரம் கேட்கின்றதே…
அடடா, ஒரு வித மயக்கம்
கண்ணோரம் பூக்கின்றதே…
போகாதது, சாகாதது
உன்னோடு என் யோசனை, ஓ
ஓடாதது, வாடானது
என்னோடு உன் வாசனை
இதுவரை உணராத உறவொன்று உறவானது…

கனவா? நிஜமா? இது இரண்டும் தானா?
விடை அருகின்ற தேடல்கள் தேவை தானா?
வெயிலா? மழையா? இது வானவில்லா?
இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா?

Random Song Lyrics :

Popular

Loading...